DEV Community

Cover image for பைத்தானுடன் எனது அறிமுகம்
jothilingam
jothilingam

Posted on

1

பைத்தானுடன் எனது அறிமுகம்

08-07-2027

வணக்கம் நண்பர்களே,

நான் எந்த விதமான கணினி துறை சார்ந்தவனும் கிடையாது. ஆனாலும் எனக்கு வலை தளங்கள் வடிவமைப்பில் ஓர் ஆர்வம் வெகு நாளாக இருந்தது. இணைய தளங்கள் வழியாக கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.இதன் மூலம் கணினி நிரல் மொழி பற்றிய அடிப்படை அறிவினை சிறிது கற்று அறிமுகம் ஆகிக் கொண்டேன்.

மேலும் தற்போது பங்குசந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நான் சில தானியங்கி செயல் முறைகளை உருவாக்க எண்ணம் கொண்டேன். அதற்கு பைத்தான் உதவும் என்பதையும் அறிந்து கொண்டேன்.

அதன் பின்பு பைத்தான் பயில்வது எப்படி என்பதை கற்க ஆரம்பித்தேன்.இந்த முயற்சியில் நான் அடைந்துள்ள இடம் தான் கணியம் அறக்கட்டளை.

தமிழ் வழியில் தமிழர்களுக்காக எவ்வளவு பெரும் முயற்சியில் தன்னார்வத்தோடு கணினி சார்ந்த அறிவை பரவலாக்க இத்தனை பேர் உழைத்துக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்து வியக்கிறேன்.

என்னாலும் இன்னும் யார் வேண்டுமானாலும் கணினி அறிவை கற்க மேம்படுத்த இந்த கணியன் 100% உதவும் என்பதை நினைந்து பெருமையோடு மகிழ்கிறேன்.

வாழ்க தமிழ்.
வளர்க கணியம்.

Heroku

This site is built on Heroku

Join the ranks of developers at Salesforce, Airbase, DEV, and more who deploy their mission critical applications on Heroku. Sign up today and launch your first app!

Get Started

Top comments (0)

Image of Datadog

The Essential Toolkit for Front-end Developers

Take a user-centric approach to front-end monitoring that evolves alongside increasingly complex frameworks and single-page applications.

Get The Kit

👋 Kindness is contagious

Please leave a ❤️ or a friendly comment on this post if you found it helpful!

Okay