DEV Community

prem Prema
prem Prema

Posted on

🏷 React Diaries with Thaatha

🏷 React Diaries with Thaatha – நாள் 1: புதிய ஆரம்பம்

“காமராஜர் சிலை… இறங்குங்க!”
என்று பேருந்து நடத்துனர் சத்தம் போட்டார்.

மனசுக்குள் ஒரு சிறிய பதப்பு…
ஆனா அதைவிட அதிகமான மகிழ்ச்சி.

கையில் வாங்கி வந்திருந்த தின்பண்டங்கள்,
அம்மாச்சிக்கும் சித்திக்கும் வாங்கிய பூப்பைகள் —
அதைப் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன்.

சிறிது தூரம் நடந்தேன்…
தாத்தா வீட்டுக்குச் சென்றேன்.

“அடடே பிரேம்… வாங்க வாங்க!”
என்று தாத்தா சிரித்துக்கொண்டே அழைத்தார்.
“ராஜகுமாரி, யார் வந்திருக்கா பாரு!” என்று அம்மாச்சியிடம் சொன்னார்.

நான் முகம் கழுவிவிட்டு வந்து,
வீட்டின் முன்புறம் இருந்த மரப்பலகையில் தாத்தா அருகில் அமர்ந்தேன்.

தாத்தா வழக்கமான கேள்விகளை கேட்டார்:

“நல்லா இருக்கியா?”
“அம்மா அப்பா எப்படி இருக்காங்க?”
“நீ இப்ப என்ன பண்ற?”

நான் மெதுவாகச் சொன்னேன்:

“தாத்தா, நான் இப்ப பயிலகம் இன்ஸ்டிட்யூட்டில் React course join பண்ணிருக்கேன்.
இன்று தான் முதல் நாள்.”

Trainer பெயர் கித்தியோன்.
நாங்க மூணு பேர் தான் trainees.

இன்று introduction மட்டும் தான் நடந்தது.

React என்ன?
Frontend development என்ன?
HTML, CSS, JavaScript, Linux OS install பண்ணுவது, GitLab use பண்ணுவது,
மேலும் தினமும் Dev.to ல blog எழுதணும் என்று சொல்லினார்கள்.

இன்று பெரிய விஷயம் எதுவும் நடக்கவில்லை.

ஆனா ஒரு முக்கியமான ஆரம்பம் நடந்தது.

தாத்தா…
இன்னைக்கு நான் முதல் படி எடுத்துட்டேன்.
நாளைக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா கத்துக்கிட்டு உங்களிடம் சொல்ல வர்றேன்.

Top comments (0)