Hello Android Engineers,
இந்த post-ல நாம coroutines, எந்த problem-அ solve பன்ன போதுன்னு பாக்கப் போறோம்.
Coroutines ரெண்டு problem-அ Solve பன்னுது. அது என்னனா
- எப்புடி long running task-அ, UI freeze ஆகாம பன்றது
- அதே சமயம், complex callbacks இல்லாம எப்புடி அந்த code-அ எழுதுறது
இப்போ long running task-னா என்னான்னு பாப்போம்.
- API call பன்றது.
- database operation பன்றது
- file upload பன்றது
- image processing பன்றது
மேல சொன்னது எல்லாம் long running task-க்கு சில examples.
Android UI, ஒவ்வொரு 16 மில்லி seconds-கும் ஒரு வாட்டி redraw ஆகும், அது தான் UI அல்லது Main thread-ஓட வேலை. அப்போதான் App smooth-ஆ இருக்கும்.
அதனால மேல சொன்ன long running task-லாம் main(UI) thread-ல பன்னக்கூடாது. அப்புடி பன்னா App lag ஆகுற மாதிரி feel ஆகும்.
அப்போ long running task எல்லாம் வேற thread-ல பன்னனும். இந்த problem-அ தான் coroutines solve பன்னுது.
அது எப்புடி solve பன்னுதுனு next post-ல பாப்போம்.
Top comments (0)