பைத்தானின் தரவு வகைகளில் ஒன்று டூப்பிள்ஸ் . இது தரவை சேமிக்க உதவுகிறது.
இதனுடைய சின்டெக்ஸ் (Syntax) :
• டூப்பிள்கள் வட்ட அடைப்புக்குறிகளுடன் எழுதப்பட்டுள்ளன.
tuple_name =(“One”,”Two”,”Three”)
அம்சங்கள்:
• டூப்பிள்ஸ் வரிசை முறையை சார்ந்தது (Ordered) . நாம் டூப்பிள்ஸ் எந்த வரிசையில் உள்ளீடு தருகிறோமோ அதே வரிசையில் தான் வெளியீடு கிடைக்கும் .
• டுப்ளிளில் உள்ள ஐட்டம் மாற தன்மை கொண்டது (Unhangeable/ Immutable in Nature). அதாவது நம்மால் வேறு ஒரு தரவை நேரடியாக இணைக்கோவோ மாற்றவோ நீக்கவோ முடியாது
• நகல் தரவை இது அனுமதிக்கும் (Duplicate Values are Allowed)
• பன்முகத்தன்மை கொண்ட கொண்டது. (heterogeneous) . அதாவது, எல்லா தரவு வகைகளையும் இது அனுமதிக்கும்
Len செயற் கூறு:(len()):
டுப்ளிளில் எத்தனை item உள்ளன என்பதை அறிய உதவும் செயற் கூறு.
உள்ளீடு (Input):
tuple_name = (“One”, “Two”, 3)
print(len(tuple_name))
வெளியீடு (Output) : 3
type() செயற் கூறு:
கொடுக்கப்பட்ட தரவு எந்த வகையை சார்ந்தது என்பதை அறிய உதவும் செயற் கூறு
உள்ளீடு (Input):
tuple_name = (“One”, “Two”, 3)
print(type(tuple_name))
வெளியீடு (Output):
Notes: ஒரே ஒரு மதிப்பை கொண்டு ஒரு டூப்பிள் ஐ உருவாக்க, மதிப்பு பிறகு காற்புள்ளியைச் சேர்க்க வேண்டும், இல்லையெனில் பைத்தான் அதை டூப்பிள்ஸ் ஆக அங்கீகரிக்காது. இல்லையென்றால் சாதாரண சரம் ஆக கருதப்படும்.
dict() Constructor:
ஒரு தரவு வகையை டூப்பிள் தரவு வகையாக மாற்ற பயன்படும் செயற் கூறு
உள்ளீடு (Input):
tuple_name = tuple((“name”,”age”,”cherry”))
வெளியீடு (Output)
(“name”,”age”,”cherry”)
சதுர அடைப்புக்குறிக்குள், குறியீட்டு எண்ணைக் குறிப்பிடுவதன் மூலம் டூப்பிள் உள்ள vales பெறலாம்
உள்ளீடு (Input):
fruits = ("apple", "banana", "orange")
print(fruits[1])
வெளியீடு (Output)
banana
இதேபோல் எதிர்மறையாகவும் செய்யலாம்
உள்ளீடு (Input):
fruits = ("apple", "banana", "orange")
print(fruits[-1])
வெளியீடு (Output)
Orange
- ட்யூப்லை புதுப்பிக்க இயலாது .ஒரு முறை உருவாக்கப்பட்டால் அதனை புதுப்பிக்க இயலாது .மாறாக , அதை லிஸ்ட் ஆக மாற்றி லிஸ்ட்டை புதுப்பித்து மறுபடியும் லிஸ்ட்டை ட்யூப்லாக மாற்றலாம். உள்ளீடு (Input): x = ("name", "address", "age") y = list(x) y[2] = "state" x = tuple(y) print(x) வெளியீடு (Output) ("name", "address", "state")
இதே முறையை பயன்படுத்தி ஒரு தரவை இணைக்கவும் மாற்றவும் நீக்கவும் இயலும்
நாம் ஒரு டூபிளை உருவாக்கும்போது, அதற்கு மதிப்புகளை பொதுவாக ஒதுக்குவோம். இது "பேக்கிங்" என்று அழைக்கப்படுகிறது. பைத்தானில், மதிப்புகளை மீண்டும் பிரித்தெடுத்தல் "அன்பேக்கிங்" என்று அழைக்கப்படுகிறது.
Packing:
உள்ளீடு (Input):
fruits = ("apple", "banana", "orange")
print(fruits)
வெளியீடு (Output)
(‘apple’, ‘banana’, ‘orange’)
Unpacking:
உள்ளீடு (Input):
fruits = ("apple", "banana", "orange")
(green, yellow, red) = fruits
print(red)
print(yellow)
print(orange)
வெளியீடு (Output)
apple
banana
orange
இரண்டு டுபிளை இணைத்தல்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டூப்பிள்களில் இணைக்க, + ஆபரேட்டரைப் பயன்படுத்தலாம்:
உள்ளீடு (Input):
tup1 = (“python”,”c”, “Java”)
tup2 = (101,300,56)
tup3 =tup1+tup2
Print(tup3)
வெளியீடு (Output):
(‘python’,’c’,’Java’,101,300,56)
Top comments (0)