DEV Community

Bharath kumar
Bharath kumar

Posted on

பழகு

தேவையை தேடி பழகு
அன்பை கொடுத்து பழகு
விரும்பியதை விரும்ப பழகு
மகிழ்ச்சியை மகிழ்ந்து பழகு
வெற்றியை தள்ளி பழகு
தோல்வியை ஆராய்ந்து பழகு
அமைதியை ரசித்து பழகு
பிறரை போற்றி பழகு
பொருளை மதித்து பழகு
காதலை காதலித்து பழகு
கண்ணால் பார்த்து பழகு
யோசித்து பழகாதே
காலத்தோடு பழகு
வருடங்கள் புதுசு பழகு
நாட்களும் புதுசு பழகு
நேரமும் புதுசு பழகு
நம் உடல் தினம் புதுசு பழகு
அனுபவித்து பழகு
ரசிப்பதற்கு தானே வந்தோம்
ஊமையாய் வாழ்வதா? பழகு
பாதுகாப்பாய் பழகு
மனம் மட்டும் ஏன் கிடைத்த ஒன்றை ஏற்று பழகுது
கிடைக்காத ஒன்றை தேடி அலைந்து போராடி பழகுது
பழகு பழகு பழகு
எதிர்கொண்டு பழகு

Top comments (0)