DEV Community

Cover image for கட்டற்ற மென்பொருள்
Fathima Shaila
Fathima Shaila

Posted on • Edited on

கட்டற்ற மென்பொருள்

தானும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவனே கற்ற கல்வியின் பயனை அடைந்தவன். அறிவை மற்றவர்களுக்கு பகிர்தலே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நவீன உலகின் வளர்ச்சியில் பங்களிப்பாற்றும் மென்பொருள் பற்றிய அறிவை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் கட்டற்ற மென்பொருள் பற்றிய சிறு பார்வை

மென்பொருள் இருவகைப்படும். ஒன்று கட்டற்றது மற்றயது பொதி/உரிமைத் தராத தனியாருக்கு சொந்தமானது.

கட்டற்ற மென்பொருளானது மென்பொருள் துறையின் அறிவு வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாற்றக் கூடியது அதன் அனுகூலங்களாவன.

  • விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம்
  • திருத்தங்களை வரவேற்க கூடியது. பலர் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
  • அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளல்.
  • பலரது மேற்பார்வையில் இருப்பதால் வழுக்கள் குறைவு.
  • பாதுகாப்பும் அதிகம்.
  • எல்லோராலும் வழுக்களை களைய முடியும்.
  • பதிப்புரிமை இல்லாத நுட்ப சுதந்திரம்.
  • தனி மனித சுதந்திரம்.
  • புதுமைகளை புகுத்த முடியும்.
  • நுட்ப சுதந்திரம்.

தனியாருக்கு சொந்தமான பொதி உரிமை தராத மென்பொருளின் பிரதிகூலங்களாவன.

  • எமது விருப்பங்களுக்கேற்ப மாற்ற முடியாது.
  • ஒரு சிலரே சரி பார்க்க முடியும்
  • அறிவை பகிர்ந்து கொள்ளாமை.
  • வழுக்கள் அதிகம்
  • பாதுகாப்பு குறைவு
  • குறிப்பிட்ட சிலரே வழுக்களை களைய முடியும்.
  • பதிப்புரிமை பெற்றது
  • தனி மனித சுதந்திரம் இல்லை. புது நுட்பங்களை புகுத்த முடியாது.

மென்பொருள் விடுதலை

மென்பொருள் என்பது அறிவும் அறிவியலும் ஆகும். மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது தனிநபர்களுக்கு மட்டும் உரித்துடையது அல்ல.

தனியுரிமை பெற்ற மென்பொருட்கள்

  1. தனி நிறுவனத்திற்கு சொந்தமானவை.
  2. பொதியாக மட்டுமே கிடைக்க கூடியவை.
  3. பயனருக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு.
  4. பகிரக்கூடாது.
  5. மாறுதல்கள் செய்ய முடியாது.

கட்டற்ற மென்பொருட்கள்
பொதுப்பயன்பாட்டு உரிமம் (GPL)தரும் இலவச 4 உரிமைகள்

  1. எங்கும் எவரும் பயன்படுத்தலாம்.
  2. தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
  3. விலைக்கோ, விலையின்றியோ பகிரலாம்.
  4. மாற்றங்களோடு மூலநிரலையும் பகிர வேண்டும்.

கட்டற்ற மென்பொருள் என்பது இளைய தலைமுறைக்கான அறிவுப்புதையல். திறமையான மாணவ சமூகத்தை உருவாக்க கூடியது.

கட்டற்ற மென்பொருளும் வியாபாரமும்

  • சேவை
  • நிறுவுதல்
  • ஆதரவு
  • கல்வி
  • மாற்றம் செய்தல்
  • வழங்கல், விற்றல்.

GNU ( GNU not unix)

Ensure 4 freedoms use for any purpose study and adapt (modify) distribute either or free gratis distribute the modified source.

Unix family tree

GNU இனால் செய்யக்கூடியவை

GNU

  • Compilers
  • Editors
  • Language
  • Network tools
  • Server
  • Database
  • Device Driver
  • Desktop utilities
  • Multimedia Apps
  • Games
  • Office
  • Application and more…

பணம் உள்ளவன் மேலும் பணக்காரனாக வேண்டும். ஏழை சாகும் வரை ஏழையாக இருப்பான் அதுவே தனியார்மயமாக்கலின் சூத்திரம். விலை உயர்ந்தவை மட்டுமே மதிப்புமிக்கதாக பார்க்கப்படும் இச்சமூகத்தில் சமூக நலனுக்காக இலவசமாக தரப்படுபவை மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

மென்பொருட்களிலும் அவ்வாறே. Windows OS, Mac OS போன்ற அதிக விலை கொடுத்து தனியாரிடம் எமது சுதந்திரம் பறிக்கப்பட்டு வாங்கும் பொருட்களே நல்லவைகளாக கருதப்படுகின்றன. மக்களின் தேவையறிந்து சமூக நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட கட்டற்ற மென்பொருட்களின் கீழ்வரும் Linux Operating System பற்றி பார்க்கலாம்.

Linux OS

Linux ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்?

  • வைரஸ்களை மறந்துவிடலாம்.
  • நிலையான பழுதுபடாத கணனி.
  • முழு பாதுகாப்பு.
  • பணம் தந்து வாங்கவேண்டியதில்லை.
  • பல்லாயிரகணக்கான மென்பொருட்கள்.
  • தொடர்ந்த மேம்பாடு.
  • மென்பொருட்கள் திருட்டு இல்லை.
  • பழைய கணனிக்கும் உயிர்தரலாம்.
  • உலகெங்கும் இருந்து இலவச உதவிகள்.
  • குறைகளை புகார் செய்யலாம்.

வைரஸ் உள்ள windows apps linux இல் இயங்காது.
Github இல் பல வகைப்பட்ட மென்பொருடகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Jobs in open Source

  • Administration
  • Development
  • Support
  • Embedded Systems
  • Entrepreneurship

Domains

  • Bio Informatics
  • Computer Network
  • Gaming Industries
  • Embedded Systems
  • Operating System
  • Research
  • Service Industry
  • System Development
  • System/ network
  • Administration
  • Training
  • Tele Communication

Industry using FOSS

Top comments (0)