DEV Community

Augshya
Augshya

Posted on

அறிமுகம்

எனக்கு கணினி துறை அனுபவம் கிடையாது. சில மாதங்களாகவே அதில் ஆர்வம் தோன்றியது. இணைய தளங்கள் வழியாக HTML , CSS கற்றுக் கொண்டேன். இது போதாது என்று நினைத்து இணையத்தில் தேடினேன் ,எந்த மொழி கற்பதற்கு மிகவும் எளிது என்று,
அப்போது எனக்கு தென்பட்டது கணியம் அறக்கட்டளை. அவ்விணையத்தில் ஏராளமான நிரல் மொழி புத்தகங்கள் தமிழில் இருந்தன. அதன்பால் நான் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையின் நிறுவனர் திரு சீனிவாசன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு கூறியது, முதலில் பைத்தானை படியுங்கள் என்று கூறினார். அது மிகவும் எளிது மற்ற நிரல் மொழியை காட்டிலும் பைத்தான் மிகவும் எளிது புரிந்து கொள்வதற்கும் படிப்பதற்கும் என்று கூறினார். அதற்க்கு அவரிடம் பைத்தானை பற்றி இணையவழியில் எடுக்க முடியுமா என்று வினவியபோது அவர் சரி என்று ஒப்பு கொண்டார்.
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ் லீனஸ் குழுவில் பதிவிட்டார் அந்த பதிவை பார்த்த திரு சயீத் சபார் அவர் எடுப்பதாக கூறினார். இந்த முயற்சி பெரும்பான்மையான மக்களுக்கு பயன்படவேண்டும் என்று நினைத்து அறக்கட்டளையின் நிறுவனர் அவர்கள் பல குழுவில் இதனை பதிவிட்டார்.
அதன் விளைவாக ஜூலை, 8, 2024 அன்று முதல் வகுப்பு தொடங்கியது அதில் சுமார் 550 பயனாளர்கள் இணைந்து தங்களின் கேள்விகளை கேட்டனர் . அவர்களுக்கு புரியும் விதமாக திரு சயீத் சபார் மற்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் பயனாளர்களின் சந்தேங்கங்களை போக்கினார். அவ்விருவருக்கும் வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது அவர்கள் கற்பித்ததை தினமும் பயிற்சி செய்து , அதை வலைத்தளத்தில் எழுதி அனுப்பவேண்டும் அதோடு நின்றுவிடாமல் அதை பிறருக்கு பயன்படும் வகையில் கற்பிக்க வேண்டும்.

பைத்தானை பார்ப்பதற்கு முன், முதலில் நிரல் மொழி (Programming Language )என்றால் என்ன என்பதை பார்ப்போம். நிரல்(Program) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது. அதாவது ப்ரோ (Pro)என்றால் முன்னாடி (Before)என்று பொருள் கிராஸ்மின் (Graphein) என்றால் எழுதுதல் என்று பொருள். நிழல் (Prohram) என்றால் முன்னாடியே எழுதி வைக்கப்பட்டது(Writing Something in Advance) என்பது பொருள்.
உதாரணம் ஒரு நபரிடம் ஒரு புதிய உணவு எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற செயல்முறை மற்றும் என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை விரிவாக ஒரு தாளில் எழுதிக் கொடுத்தால் அதை படித்து அவ்வாறே செய்து விடுவார் .
இதே அடிப்படையில் கணினிக்கும் ஒரு நிரல் மொழியை எழுதலாம், கொஞ்சம் கூடுதல் விளக்கங்களைஅத்தோடு சேர்க்க வேண்டும் .எப்படி என்றால் ஒரு நபருக்கு நாம் இதை செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுத்தால் போதும் ,அவருக்கு சிந்திக்கும் திறன் ,என்ன பொருள் எங்கு உள்ளது என்பது தெரியும் .ஆனால் நிழல் மொழி என்று வரும்போது நாம் என்ன செய்ய சொல்கிறோமோ அது தான் அதை செய்யும். அதனால் தெளிவாக விளக்கமாக அதற்கு புரிய வைக்க வேண்டும் .
பருப்பு எங்கு உள்ளது என்பதை மூன்றாவது அலமாரியில் ,இடது புறத்திலிருந்து நான்காம் இடத்தில் உள்ளது. அதை அடைய அடுப்பில் இருந்து இரண்டடி நேராக எடுத்து வைத்து வலது பக்கம் இரண்டடி திரும்பி நேராக இரண்டடி சென்று கதவை திறக்க வேண்டும் என்று விரிவாக சொல்ல வேண்டும் .தெளிவாக எழுத வேண்டும் .
மொழி என்றால் மனிதர்கள் தங்களின் கருத்துக்களை தெரிய பயன்படுத்துவது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழி தேவைப்படுகிறது உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. அதில் முக்கிய மொழிகளாக கருதப்படுவது ஆங்கிலம். ஹிந்தி, தமிழ் முதலிய மொழிகள் ஆகும் . மொழிகளைப் போலவே கணினிக்கும் பல மொழிகள் உள்ளன .அதில் ஒன்றுதான் நாம் கற்கவிருக்கும் பைத்தான் மொழி ஆகும் .

அறிமுகம்

பைத்தான் என்பது பொது பயன்பாட்டு நிரல் ஆக்க மொழி ஆகும் இதை நெதர்லாந்தின் கணிதவியல் மற்றும் கணித அறிவியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் (CWI – Centrum Wiskunde & Informatica) சார்ந்த கைடோ வான் ரோஸும் என்பவரால் உருவாக்கப்பட்டது. இம்மொழி 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பைத்தான் அதன் பெயரை எழுதுகளில் 70களில் பிரபலமான பிபிசி நகைச்சுவை தொடரான “மோண்டி பைத்தான் பிளையிங் சர்க்கஸ்” இருந்து பெயர் பெற்றது.பைத்தான் கட்டமைக்கப்பட்ட நிரலாக்க மொழி (Procedural) மற்றும் பொருள் நோக்கு நிரலாக்க மொழியை (Object Oriented Programme)ஆதரிக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்:

மொழி பெயர்ப்பாளர் என்றால் வேறொரு நாட்டவர் ,நம் நாட்டில் வந்து உரையாடும்போது நமக்கு அந்த மொழி புரியவில்லை என்றால் உடனே மொழிபெயர்ப்பாளர் அவற்றை மொழி பெயர்த்து நமக்கு விளங்க வைப்பார்.
அதுபோலவே கணினிக்கும் நிரல் மொழியை புரிய வைப்பதற்கு இரண்டு மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர் .அவர்கள்தான் interpreter மற்றும் Compiler.
interpreter என்றால் வரிவரியாக மொழி மாற்றம் செய்பவர் .
Compiler என்றால் ஒரு பத்தியோ அல்லது உரையாற்றி முடிந்த பின்னால் அதனை மொழி மாற்றம் செய்பவர் என்ற பொருள்.
பைத்தான் நிரல்மொழி interpreter வகையை சார்ந்தது பைத்தான் நிரல் மொழியை 2 முறையில் எழுதலாம் ஒன்று ஊடாடும் முறை(Interactive) இன்னொன்று ஸ்கிரிப்ட் முறை (Script) முறைகளில் எழுதலாம்.

பைத்தானை ஏன் படிக்க வேண்டும் ?:
• பைத்தானை படிப்பதற்கு காரணம் மற்ற நிரலாக்க மொழியை காட்டிலும் பைத்தான் புரிந்து கொள்ளவும் படிக்கவும் மிகவும் எளிமையாக உள்ளது.
• முக்கிய காரணம் மற்ற மொழிகளை விட இதில் உள்ள செயற்குழு மிகவும் எளிதாக உள்ளது .
• எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய மொழி .
• இதனை அனைத்து osகளிலும் இயக்கலாம் .
• உயர் நிலை நிரலாக்க மொழி (High Level Programming Language)
• மற்ற மொழிகளோடு இணைந்து பயணிக்கும் தன்மை கொண்டது. இதனை பைத்தான் ஃபிளேவர்ஸ் (Python Flavors)என்று அழைக்கப்படுகிறது .உதாரணம்: Cpyton,Jpython, Rupy Python, Pypy, Annoconda Python etc.,
• நிழல் மொழி பின்புலம் இல்லாதவர்கள் பைத்தானை முதலில் படித்தால் அவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் .இதனுடைய சின்டெக்ஸ் மிகவும் எளிமையாக உள்ளது.
• இதில் லைப்ரரி (Libarary) மற்றும் பிரேம் வொர்க் (Frame Work) அதிகமாக உள்ளது.
லைப்ரரி(Library) என்றால் நமக்கு வேண்டிய புத்தகத்தை நாமே சென்று அதனை தேடி எடுத்துக் கொள்வது. ஃப்ரேம் ஒர்க் என்றால் என்ன தேவையோ அது எல்லாமே ஒரே இடத்தில் கிடைப்பது.
உதாரணத்திற்கு, நாம் தேநீர் தயாரிக்கும் போது அதில் சுவையையும் மனத்தையும் கூட்டுவதற்காக ஏலக்காய், பட்டை முதலிய பொருட்களை சேர்க்கிறோம்.. தினமும் இவ்வாறு செய்வதால் கொஞ்சம் காலம் ஆகிறது அதை உருவாக்குவதற்கு. அதை நாம் கொஞ்சம் எடுத்து உபயோகிக்கலாம் இதுதான் Frame Work.eg (django,etc.,)

இப்பொழுது பைத்தானை படித்தால் ஏற்படும் பயன்களை பார்ப்போம். என்னென்ன துறைக்கு பைத்தானை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

  1. Web Application: a. Pythonwikiengine b. Python-Pocoo c. Python Blogsoftware
  2. AI(Artificial Intelligence)
  3. Machine Learning a. Scienticfic Computation – Numpy b. Advanced Computing – Scipy c. Machine Learning - pybrain
  4. Desktop GUI Application
  5. Software Development a. Libraries and Function
  6. Scienticfic and Numeric Computing a. Scipy (Engineering, Mathematics and Science) b. Pandas
  7. Business Application a. Erp, e-Commerce
  8. Console Based Application a. Command Prompt b. SQL Python
  9. Audio/Video Based Application a. Timplay b. Cplay
  10. 3CAD Application a. Fandango
  11. Application for Image a. VPython b. Gogh c. Imgseek
  12. Games and 3D Graphics a. Snake Game b. Pygame c. Pykyre d. Tic Tac Toe இப்பொழுது பைத்தானை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்ப்போம்

Image description

Image description

Image description

Image description

Image description

Image description

Image description

Image description

Top comments (0)