லினக்ஸ் யுனிக்ஸ் இயங்குதளத்தின் பிரபலமான பதிப்புகளில் ஒன்றாகும். அதன் மூலக் குறியீடு இலவசமாகக் கிடைப்பதால் இது திறந்த ஓபன் சோர்ஸ். லினக்ஸ் பயன்படுத்த இலவசம். லினக்ஸ் யுனிக்ஸ் அடிப்படை கட்டமைப்புத்தன்மையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன் செயல்பாட்டு பட்டியல் யுனிக்ஸ் இன் செயல்பாட்டுப் பட்டியலைப் போலவே உள்ளது.
லினக்ஸ் இயக்க முறைமையின் கட்டமைப்பு முக்கியமாக சில கூறுகளைக் கொண்டுள்ளது:
வன்பொருள் அடுக்கு (ஹார்ட்வார் லேயர்),
கர்னல்,
ஷெல் பயன்பாடு,
கணினி நூலகம் (சிஸ்டம் லைப்பிரேரி அண்ட் யுடிலிட்டி)
1) வன்பொருள் அடுக்கு (ஹார்ட்வார் லேயர்)
வன்பொருள் அடுக்கு (ஹார்ட்வார் லேயர்) அனைத்து புற சாதனங்களையும் (RAM/ HDD/ CPU போன்றவை) ஆகியவற்றை கொண்டுள்ளது.
2) கர்னல்
கர்னல் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம்யின் முக்கியப் பிரிவில் ஒன்றாகும். இந்த லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்யின் அனைத்து முக்கிய செயல்பாடுகளுக்கும் இது பொறுப்பு. கர்னல் மிக முக்கியமான செயல்பாடு என்னவென்றால் இது வன்பொருள் அடுக்கு (ஹார்ட்வார் லேயர்) நேரடியாக தொடர்பு கொண்டு அதில் பெறப்படுகின்ற செயல் அனைத்தும் இயந்திர மொழி (மெஷின் லாங்குவேஜ் அல்லது லோ லெவல் லாங்குவேஜ் ) ஆக மாற்றி செயல்புரிந்து அதில் வருகின்ற முடிவுகளை நாம் புரிந்துக்கொள்கின்ற மாற்றி கொடுக்கும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனித்தனி வகையான மாட்யூல்களைக் கொண்டுள்ளது மற்றும் அடிப்படை வன்பொருளுடன் நேரடியாக ஒத்துழைக்கிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான கர்னல் வகைகள் உள்ளன:
மோனோலிதிக் கர்னல் (Monolithic Kernel)
மைக்ரோ கர்னல்கள் (Micro kernels)
எக்ஸோ கர்னல்கள் (Exo kernels)
கலப்பின கர்னல்கள் (Hybrid kernels)
3) ஷெல் பயன்பாடு
இது கர்னல் மற்றும் பயனர் இடையே ஒரு இடைமுகம். இது கர்னலின் சேவைகளை வாங்க முடியும். இது பயனர் மூலம் கட்டளைகளை எடுத்து கர்னலின் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. இது எல்லாவிதமான ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் ஷெல் பயன்பாடு இருக்கிறது. உதாரணமாக விண்டோஸ் யில் டாஷ் (DOS) ஆக இருக்கும். இது இரண்டு வகைப்படும். அதில் ஒன்று கிராபிக்கல் யூசர் இன்டெர்பேஸ் ஷெல் , மற்றொன்று கமெண்ட்-லைன் ஷெல்.
கிராபிக்கல் யூசர் இன்டெர்பேஸ் ஷெல் என்பது யூசர் மௌஸ்யை உதவிகொண்டு செயல்புரிவது. மற்றொன்று கமெண்ட்-லைன் ஷெல் என்பது யூசர் கொடுக்கும் கமெண்ட்களை கொண்டு செயல் புரியும். நாம் கம்ப்யூட்டர்யை வேகம்மாக செயல்புரிய கமெண்ட்-லைன் ஷெல் ரொம்ப உதவியாக இருக்கும்.
ஷெல் சில வகைகள் உள்ளன, அவை பின்வருமாறு
கார்ன் ஷெல் (korn shell)
போர்ன் ஷெல் (bourne shell)
சி ஷெல் (C shell)
போஷிஸ் ஷெல் (posix shell)
4) கணினி நூலகம் (சிஸ்டம் லைப்பிரேரி அண்ட் யுடிலிட்டி)
ஆப்பரேட்டிங் சிஸ்டம்யின் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை செயல்பாடுகள். இது அப்பிளிகேஷன்னே சரியாக செயல்புரிய இது உதவுகிறது.
Top comments (0)